சொகுசு கார் மோதியதில் தீப்பற்றி எரிந்த பைக்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்!!

Author: Babu Lakshmanan
29 November 2022, 12:03 pm

புதுக்கோட்டை ; கந்தர்வகோட்டை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதி தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அக்கசிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே கந்தர்வகோட்டை வேம்பன் பட்டி பகுதியை நோக்கி இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தது. பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து கீரனூர் நோக்கி செல்வதற்காக எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருசக்கர வாகனம் உடனே தீ பற்றி எரிந்தது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் காயங்களுடன் தீவிர சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கொண்டு சேர்க்கப்பட்டனர். மேலும், இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக பெட்ரோல் பங்க் அருகில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சிக்னல் போர்டுகளை சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறையினர் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 552

    0

    0