சாலையோரம் நடந்து சென்ற கர்ப்பிணி… அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!
Author: Babu Lakshmanan21 May 2024, 4:30 pm
மதுரையில் கர்ப்பிணி பெண் மீது பைக் மோதிய விபத்தில் அவர் கிழே விழுந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. கர்ப்பிணி பெண்ணுக்கு தலையில் பலத்த காயமடைந்து அரசு ஒத்தக்கடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: போதையில் அதிவேகமாக காரை ஓட்டி 2 பேரை கொன்ற 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன்.. விமர்சிக்கப்படும் நீதி!!
மதுரை ஒத்தக்கடை பகுதியில் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, கர்ப்பிணி பெண் மீது பைக் மோதி சாலையில் கீழே விழும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.