நின்று இருந்த லாரியில் வேகமாக வந்து மோதிய பைக்… +2 மாணவன் உள்பட இருவர் பலி ; பிறந்த நாள் கேக்குடன் சென்ற போது நிகழ்ந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 9:50 am

அரூரில் உறவினர்களுக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய +2 மாணவன் உட்பட இரண்டு பேர் நின்றுக்கொண்டிருந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (23), மற்றும் +2 தேர்வு எழுதி முடித்த மாணவன் அம்பேத் செல்வன் ஆகிய இருவரும் அவருடைய உறவினர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக்கொண்டு ரவுண்டானாவில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அரூர் பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு பரிசோதித்ததில் இருவரும் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

பின்பு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை பார்த்த பெற்றோர்கள் கதறி கதறி அழுத காட்சி காண்போரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும், இதுகுறித்து அரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட இருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதால் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ