தவறான பாதையில் வந்த பைக்.. கார் மீது மோதி விபத்து : ஆளில்லாமல் தானாக சென்ற பைக்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2022, 9:19 pm

கோவை : தவறான பாதையில் வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து ஏற்பட்ட நிலயில் ஆளில்லாமல் பைக் சிறிது தூரம் சென்ற காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குறிச்சி பகுதியின் ஒரு வழிப்பாதையில் கல்லூரி மாணவர் இரு சக்கரத்தில் செல்கையில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்தனர்.

இதில் கல்லூரி மாணவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகே இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

https://vimeo.com/694945727

விபத்தின் போது மாணவன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாலும், இரு சக்கர வாகனம் மட்டும் நிற்காமல் சில அடி தூரம் தானாக சென்றது. எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் சிறுது தூரம் சென்று கிழே விழுந்தது. மேற்கொண்ட விபத்து மற்றும் இரு சக்கர வாகனம் தானாக சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 2007

    0

    0