குமரியில் நகை பறிப்பில் ஈடுபடும் கேரள பைக் ரேஸர்… ஒசூரில் இளம்பெண்களுடன் உல்லாசம்… சட்டென உள்ளே நுழைந்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
8 November 2022, 5:11 pm

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், நித்திரவிளை சுற்றுவட்டார இரு சக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரள பைக் ரேஸரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 21ம் தேதி குலசேகரம் அருகே வீட்டின் முன் பெருக்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் இரண்டரை சவரன் மற்றும் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை தாக்கி 10 சவரன் என இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் இரு தனிப்படை அமைத்து போலீசார் சிசிடி வி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்த மனிஷ் (21) பைக் ரேஸர் கைது செய்தனர்.

குமரியில் நகை திருடி விட்டு ஓசூரில் இளம் பெண்களுடன் உல்லாச வாழ்க்கை அனுபவிக்கும் போது, ஒசூரில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் ஒருவன் தப்பி ஓடிய நிலையில் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 806

    0

    0