கேசுவலான வாக்… வேட்டியை மடித்து கட்டி விட்டு பைக்கை திருடிய 45 வயது நபர் ; அதிர்ச்சி சிசிடிவி!!

Author: Babu Lakshmanan
30 April 2024, 9:44 pm

வீட்டில் சாப்பிட்டு விட்டு வருவதற்குள் இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி சென்ற பலே கில்லாடியின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சார்ந்த சங்கர் பணிக்கு சென்றுவிட்டு, மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் மதிய உணவு உட்கொள்ள கடந்த 22ம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் உணவு உட்கொண்டுவிட்டு மீண்டும் வெளியே வந்தபோது, வீட்டில் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போய் இருந்துள்ளது.

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த சங்கர், அக்கம்பக்கத்தில் இரு சக்கர வாகனத்தை தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து… சிறுவன் உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலி ; ஏற்காட்டில் சோகம்..!!!!!

இதனையடுத்து, போலீசார் சங்கரின் எதிர்வீட்டில் இருந்த சி. சி. டி.வி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, 45 வயதுமிக்க நபர் ஒருவர் கையில் பிளாஸ்டிக் பையுடன் சாலையில் நடந்து செல்வது போல் நடந்து சென்று, வீட்டின் வாயிலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாவியை போட்டு திருடி சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வழக்குப் பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீசார் இருசக்கர வாகன திருடனை தேடி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!