பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் பைக் திருட்டு.. வைரலாகும் ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2024, 1:53 pm

பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் பைக் திருட்டு.. வைரலாகும் ஷாக் சிசிடிவி காட்சி!!

கோவையில் பட்டப்பகலில் வங்கி ஊழியரின் பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மோகன் (40). இவர் வங்கியில், நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை 8 மணியளவில் தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு பார்க்கேட் பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது அவர் தனது பைக் சாவியை எடுக்காமல் சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் நைசாக பைக்கை ஸ்டார்ட் செய்து திருடி சென்று விட்டார். திரும்பி வந்த ரமேஷ் மோகன் தனது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் பைக்கை திருடி சாவகாசமாக தப்பி செல்வது தெரியவந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பைக்கை திருடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!