பைக்கை நிறுத்திவிட்டு மருந்து வாங்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; ஷாக் சிசிடிவி காட்சி.. போலீசார் விசாரணை
Author: Babu Lakshmanan8 February 2024, 5:02 pm
பழனி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு பழனி சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பழனி அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கே பழனி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டடப்பணிகள் நடந்து வருகிறது. சிகிச்சைக்காக வந்த ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருந்து வாங்க சென்றிருந்தபோது, அங்கு பச்சை நிற வேட்டி அணிந்து மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பழனி நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்த நபரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.