பரபரப்பான பந்தய சாலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் திருட்டு : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan18 May 2023, 10:48 am
கோவை ரத்தினபுரி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் சுரேஷ். இவர் பந்தய சாலை பகுதியில் அலுவல் வேலையாக வந்திருக்கின்றார்.
அப்போது அப்பகுதியில் வாகனத்தை நிறுத்தியிருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி செல்கின்றார். இது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் சுரேஷ் தந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் பைக்கை கொள்ளையடித்த கொள்ளையனை தேடி வருகின்றனர்.