கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் திருட்டு.. பட்டப்பகலில் துணிகரம் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2024, 2:42 pm

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பின்புறம் உள்ள மேல மாசி வீதியில் வசித்து வரும் சுப்பையா என்பவர் தனது வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

நேற்று பிற்பகல் அவர் வீட்டிற்குள் இருந்த நிலையில் , அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த சுப்பையா, தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: விஜய் அரசியல் குறித்து கொதித்த எஸ்.ஏ சந்திரசேகர்.. செய்தியாளரை வசைபாடி ஓட்டம் பிடித்த தாயார் ஷோபா!

பட்ட பகலில் மோட்டார் சைக்கிளை இளைஞர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது . இதை அடிப்படையாக வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!