அலறவிட்ட பைக் வீலிங்… பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்று அட்டகாசம்..!

Author: Vignesh
20 June 2024, 6:15 pm

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பைக் வீலிங் செய்து வாகன ஓட்டிகளை சில கும்பல் அச்சுறுத்தி வருகிறன.

போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்கி, பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் பைக் மற்றும் கார் ஓட்டிகளை தமிழக போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்து வருகின்றனர்.

இதனிடையே, கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள் கும்பலாகச் சேர்ந்து நகரின் முக்கியமான சாலைகளில் பைக் சாகசங்கள் செய்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கோவையில் திருச்சி சாலை, அவினாசி சாலை, ரேஸ்கோர்ஸ், கொடிசியா உள்ளிட்ட பகுதிகளில் வலம் வரும் சில பைக்கர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக திடீரென வீலிங் செய்து, பைக்கில் சாகசங்கள் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் செய்யும் அட்டகாசங்களை வீடியோவாக பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் c_l_u_t_c_h__breaker என்ற பெயரில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க பைக்குளில் இருந்து நம்பர் பிளேட்டை அகற்றி விடுகின்றனர்.

முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். சாகசங்கள் செய்ய ஏற்ற இடங்களைத் தேர்வு செய்யாமல், பொது இடங்களில் சேட்டைகள் செய்து மக்களை அச்சுறுத்தும் நபர்களை கோவை மாநகர போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பிறர் உயிரோடு விளையாடும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!