பழைய இரும்பு கடையில் திடீர் வெடிவிபத்து… சாலையில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
6 May 2023, 8:31 am

கோவை ; பழைய இரும்பு கடையில் வைத்திருந்த தீ அணைப்பான் உருளை வெடித்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் கால் முறிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் அருண். இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று குனியமுத்தூரில் இருந்து பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையின் வலது புறத்தில் குமார் என்பவரின் பழைய இரும்பு கடையில் வைத்திருந்த தீ அணைப்பான் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில், வெடித்த சிலிண்டரின் பாகம் இடது புறம் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த கல்லூரி மாணவரின் பலமாக தாக்கியது. இதில், அவரது கால் இரண்டாக முறிந்தது.

இதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே