மீன் விற்பனை செய்த போது இருதரப்பு மோதல்… பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பேருக்கு அரிவாள் வெட்டு : சினிமா பாணியில் நடந்த பயங்கரம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2022, 2:32 pm
திண்டுக்கல் : சினிமா பாணியில் நல்லிரவில் பட்டாகத்தி அரிவாலுடன் புகுந்து சராமாரியாக வெட்டி பெட்ரோல் குண்டுகளை வீசி கிராமத்தையே சூரையாடிய கூலிப்படையினர் சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளபட்டி ஊராட்சி கந்தப்பக்கோட்டை கிராமத்தில் நேற்று காலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த ஆதித்யா (வயது 20), சத்திரியன் (வயது 22) உட்பட மூன்று இளைஞர்கள் மினிவேனில் மீன் விற்பனை செய்து வந்துள்ளனர்.
சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தி மீன் விற்பனை செய்து வந்ததால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு மீன் விற்பனை செய்யும் நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது.
இதில் மீன் விற்பனை செய்த இளைஞர்கள் மூன்றுபேரும் சேர்ந்து அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கடுமையாக தாக்கி அவர்களின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து கந்தப்பகோட்டை பகுதி மக்கள் அண்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் தாக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் உறவினர்கள் பள்ளபட்டி அருகில் நிறுத்தப்பட்டிருந்த மீன் விற்பனை செய்த வேன் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமுற்ற பள்ளப்பட்டி மீன் வியாபாரிகளான சத்திரியனும் அவரது சகோதரர் ஆதித்தியாவும் அவர்களது கூட்டாளிகளான மதுரை சோழவந்தான் வாடிப்பட்டி உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கூலிப்படையினரை வரவைத்து உருட்டுக்கட்டை, பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் 30-க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கந்தப்பக்கோட்டைக்குல் புகுந்து வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் வீடுகளை அடித்து நொறுக்கினர்.
மேலும் கையில் கொண்டு வந்திருந்த 5-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இது வீட்டிற்குள் இருந்த கிராம மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். ஒரு சிலர் வீட்டிற்கு பாதுகாப்பாக இருந்துள்ளனர்.
வெளியே வந்த நபர்களை சினிமா பாணியில் அரிவாளைக்கொண்டு விரட்டிவிரட்டி வெட்டி உள்ளனர். இதில் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் இருவர் கலைக்கிடமாகவும் உள்ளனர்.
மேலும் ஆடு மாடு போன்றவைகளையும் வெட்டியவர் ஒரு ஆட்டை வெட்டி சாலையில் தூக்கி வீசிச்சென்றனர். நள்ளிரவில் சினிமாவில் நடப்பது போல் கூலிப் படையினரை அழைத்து வந்து கிராமத்திற்குள் புகுந்து வீடுகள் வாகனங்கள், ஆடு, மாடுகள் மற்றும் பொது மக்களையும் தாக்கியதில் அப்பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் தேனி சரக காவல்துறை டிஐஜி ரூபேஷ்குமார் மீனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை செய்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கிராமம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர் மேலும் மீன் விற்பனை செய்ய வந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனை சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கூலிப் படையினரை அழைத்து வந்து ஊரை சூறையாடியது நிலக்கோட்டை தாலுகா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது