கோவை: கோவையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அரிவாள் மூக்கன் பறவையை மீட்ட பறவைகள் நல ஆர்வலர் ஒருவர் அதனை சிகிச்சைக்காக மறுவாழ்வு மையத்தில் சேர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அரிவாள் போன்று நீண்ட மற்றும் வலைந்த அலகையும், வெள்ளை நிறத்தில் உடலையும் கொண்ட நீர்ப்பறவையே அரிவாள் மூக்கன் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் தமிழ் நாட்டுப்பகுதியைச் சார்ந்த பறவையான இது இந்திய துணைக் கண்டப்பகுதி, தென் மேற்கு ஆசியப் பகுதி, வடக்கு இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மேலும் ஜப்பான் போன்ற கீழ்திசை நாடுகளில் பரவியுள்ளது.
பெரிய மரக்கிளைகளின் மேல் கூடுகட்டி 2 முதல் 4 முட்டைகள் வரை இடும் தன்மையுடையது இப்பறவை. இந்த இனத்தை சேர்ந்த பறவை ஒன்று கோவை அரசு மருத்துவமனையில் அடிபட்டு கிடப்பதாக கோவையை சேர்ந்த பறவைகள் நல ஆர்வலர் விவேக் என்பவருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற விவேக், எறும்புகள் சூழ்ந்த நிலையில் இருந்த அரிவாள் மூக்கன் பறவையை அதனை கோவை வனத்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் அனிமல் ரெஸ்க்யூயர்ஸ் பறவைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு பறவைக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. பறவை அடிபட்டதாக தகவல் தெரிந்ததும், அதனை மீட்டு மறுவாழ்வு அளித்த ஆர்வலர் விவேக்கிற்கு வனத்துறையினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.