கேரளாவை புரட்டிப்போடும் பறவை காய்ச்சல்… கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கோவைக்குள் அனுமதிக்கப்படும் வாகனங்கள்…!!

Author: Babu Lakshmanan
28 October 2022, 4:26 pm

கோவை ; கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலியாக கோவை – கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 1500 வாத்துகள் திடீரென உயிரிழந்தது. மேலும் அதற்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்திள்ளது.

பறவை காய்ச்சல் பரவல் காரணமாக அருகே உள்ள கோவை மாவட்ட எல்லைகளில் வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம், சோதனைச் சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் இந்த கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது.

குறிப்பாக கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…