பிறந்த நாள் சாக்லேட் சாப்பிட்ட 20 பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ; சயனபுரம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
17 November 2022, 5:51 pm

ராணிப்பேட்டை மாவட்டம் சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20 மாணவர்கள் பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே சயனபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில்இ சுமார் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் லோகேஸ்வரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தன்னுடன் பயிலும் சகமானவர்களுக்கு சாக்லேட்களை வழங்கி உள்ளான்.

அந்த சாக்லேட்களை சாப்பிட்ட மாணவர்கள் சற்று நேரம் கழித்ததும், தனது ஆசிரியரிடம் தங்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் தலைவலி ஏற்படுகிறது என தெரிவித்துள்ளனர். உடனடியாக வகுப்பு ஆசிரியர் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அங்கிருந்து வட்டார மருத்துவ அலுவலர் ரதி தலைமையில் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்தனர். மயக்கம் அடைந்த மாணவர்களுக்கு முதலுதவி அளித்து வருகின்றனர்.

மேலும், இதில் காலாவதியான சாக்லேட் சாப்பிட்டதால் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக மாணவர்களுக்கு தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு முதலுதவி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நெமிலி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்களிடையே அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் நலம் விசாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர பாண்டியன் நேரில் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 861

    0

    0