வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியாணி… செல்லப்பிராணிகளுக்கு சிக்கன் : மீண்டும் வைரலான ரஞ்சனா நாச்சியார்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 5:29 pm

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியாணி… செல்லப்பிராணிகளுக்கு சிக்கன் : மீண்டும் வைரலான ரஞ்சனா நாச்சியார்!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உணவுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் போரூர் அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் தனது பங்கிற்கு சமையல் செய்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று உணவுகளை அளித்து வருகிறார்.

அதில் ஒரு படி மேலே சென்று மழை வெள்ளத்தால் நாய்களும் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் அவைகளுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் மனிதர்களுக்கு மட்டுமின்றி நாய்களுக்கும் பிரத்தியேகமாக சமையல் செய்து வழங்கி வருகிறார்.


குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சைவ உணவையும், நம்மை காக்கும் கால பைரவர்களான நாய்களுக்கு சிக்கன் பிரியாணி பிரத்தியேகமாக செய்து மழை வெள்ளத்தால் உணவின்றி தவித்த நாய்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி வருகிறார்.

பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வரும் நிலையில் சற்று ஒரு படி மேலே யோசித்து நாய்களுக்கும் பிரத்தியேகமாக சிக்கன் பிரியாணி செய்து வழங்கி வந்தது வரவேற்பை பெற்றது.

  • Jailer 2 movie teaser TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!