பிரியாணி கடையை முடித்துவிட்டு தினமும் ‘அங்கு’ சென்ற நபர்.. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்!

Author: Hariharasudhan
25 December 2024, 5:51 pm

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக பிரியாணிக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னையின் இதயமான கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவருடன் பழகி வந்து உள்ளார். மேலும், இருவருமே பல்கலைக்கழக விடுதியில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்கள் வெளியே சென்றுள்ளனர். பின்னர், பல்கலைக்கழகம் திரும்பிய அவர்கள், பல்கலை வளாகத்திற்குள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்து உள்ளனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற இரண்டு பேர், பேசிக் கொண்டிருந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல், மாணவியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

மேலும், இதனை வீடியோ எடுத்த அந்த நபர்கள், வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், பிஎன்எஸ் 64 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

Biryani Shop man arrested for Sexual assault in Anna University

இதன்படி, பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில்ல், சம்பவத்தன்று பல்கலைக்கழகத்திற்குள் இருந்த மாணவ, மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பவர் ஞானசேகரன் என்பதும், அவர் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. சாலையோர பிரியாணி கடை நடத்தி வரும் இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நினைவுக்கு திரும்பிய சிறுவன்… சிகிச்சைக்காக ரூ.2 கோடி கொடுத்த புஷ்பா படக்குழு!

மேலும், ஞானசேகரன் தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணி கடை விற்பனையை முடித்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்று, அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி, பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

குறிப்பாக, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தனிநபராகச் சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 44

    0

    0

    Leave a Reply