பாஜக வளர இலவசமாக விளம்பரம் செய்கிறது பாமக : அன்புமணிக்கு அன்பான கோரிக்கையை வைத்த அர்ஜூன் சம்பத்!!
Author: Udayachandran RadhaKrishnan5 June 2022, 11:42 am
அதிமுகவில் இருப்பவர்கள் ஒரு சிலர் இப்படி பேசுகிறார்கள் என்று பார்த்தால் பாமக ஒருபுறம் பதறிக் கொண்டு இருக்கிறது. இதுபோன்ற விளம்பரங்களை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அவர்கள் வெளியே போய் இருக்கிறார்கள் எனவே பாமக அவர்களின் அரசியலை சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மனிதர்களை ஜாதிவாரியாக பிரிப்பது ஜாதிவாரியான இடஒதுக்கீடு மேலும் மேலும் ஜாதி வித்தியாசங்களை ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்,
அது சமூக நீதி ஆகாது. ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும், அவர் பிரிவினைவாதிகள், தேச துரோகிகள் உடனான உறவை ரத்து செய்துவிட்டு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துப்போக வேண்டும் என அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.