பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகி இடையே மோதல் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே கொங்கு மெஸ் நிறுவனம் நடத்தி வருபவர் கொங்கு ரமேஷ். கொங்கு ரமேஷ் பாரதிய ஜனதா கட்சியில் மாநில நிர்வாகியாக பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்களம் ரவி புதிய தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது கொங்கு ரமேஷ் என்பவருக்கும், மங்கலம் ரவி என்பவருக்கும் இடையே மாவட்ட தலைவர் பொறுப்பு பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில், திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக மங்கலம் ரவி பதவி பெற்றார். மேலும், அவ்வப்போது மங்கலம் ரவி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகியான கொங்கு ரமேஷ் என்பவருக்கும் அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று பேருந்து நிலையம் அருகே மனதின் குரல் நிகழ்ச்சி மாநில நிர்வாகி கொங்கு ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கொங்கு ரமேஷுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மனதின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும், இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நேற்று மாலை பேருந்து நிலையத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி திடீரென தாக்குதல் நடத்தினர்.
அப்போது, கொங்கு ரமேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகி மூவரும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பாக மாறியது. இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகி சங்கர் மற்றும் கொங்கு ரமேஷ் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்கலம் ரவிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வந்த காவல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், காதலியின் கொலைக்கு பழிவாங்க நினைத்த நபர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.…
அதிக இடங்களுக்காக கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விழுப்புரம்: விடுதலைச் சிறுத்தைகள்…
சதீஷ் இப்போது எப்படி இருக்கிறார்? 2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன்,நந்திதா தாஸ்,தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான…
கூலி படத்தின் ஓடிடி மற்றும் வெளிநாட்டு உரிமம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’…
நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை கடந்த ஆண்டு நவம்பரில்,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு…
அரசியல் அழுத்தம் காரணமா? விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா?" நிகழ்ச்சி,சமூகம்,அரசியல்,கலாச்சார தலைப்புகளில் மக்கள் மத்தியில்…
This website uses cookies.