BJP அண்ணாமலையும், PMK ராமதாசும் போட்ட கணக்கு போலி : அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த பதிலடி!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2024, 9:51 pm
BJP அண்ணாமலையும், PMK ராமதாசும் போட்ட கணக்கு போலி : அமைச்ச் பெரியகருப்பன் கொடுத்த பதிலடி!
புதுக்கோட்டையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, இப்போது நடந்த தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும்,தேர்தல் நடத்தாமல் போகிற அரசாங்கம் இந்த அரசாங்கம் அல்ல, ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்.
கடந்த ஆட்சி காலத்தில் நடக்காத தேர்தல்களையும் நடத்தி ஜனநாயகத்தை நிலை நாட்டியவர் தான் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
நம்ம நினைத்தால் உடனடியாக தேர்தலை நடத்த முடியாது, அதற்கான பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் உறுப்பினர்களை சேர்க்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் இவையெல்லாம் சரியான பிறகு தேர்தல் நடத்தப்படும்.
மேலும் படிக்க: வடமாநில ஓட்டு வேட்டையில் குதிக்கும் CM ஸ்டாலின்?… இண்டி கூட்டணிக்கு கை கொடுக்குமா?…
கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதற்காகத்தான் அந்த நிர்வாகம் உள்ளது,
கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாடு வருவது சகசம்தான், அதனை தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர்,எங்காவது குடிநீர் கிடைக்கவில்லை என்று நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தால் நிவர்த்தி செய்யப்படும்,
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் மீது 525 கோடி ரூபாய் மோசடி புகார் வந்திருப்பது நல்லதல்ல நடந்து இருந்தால் அது கண்டிக்கத்தக்கது,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 10 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறியிருக்கிறார் பாமக தலைவர் ராமதாஸ்.
40 இடங்களையும் நாங்கள் தான் பிடிப்போம் என்று கூறியிருக்கிறார். எண்ணி முடிக்கும் வரை எல்லோருக்கும் எல்லா எண்ணிக்கையையும் சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது அதனால் சொல்லிக் கொள்ளலாம்,
வரலாறு காணாத காணா அளவிற்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் மற்றும் குழு கடன் சிறு தொழில் கடன் உள்ள கடன்கள் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது வழங்கப்பட்ட கடன் தொகை முறையாக வந்து கொண்டுள்ளது
0
0