தேர்தலை புறக்கணித்த பாஜக.. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களித்த பாஜக எம்எல்ஏ.. அந்த வார்த்தை தான்!
Author: Udayachandran RadhaKrishnan5 February 2025, 11:43 am
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரோடு சிஎஸ்ஐ பள்ளியில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சிகே சரஸ்வதி வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ சிகே சரஸ்வதி
ஜனநாயக கடமையாற்ற வந்துள்ளேன்.ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்கு செலுத்துவது என்பது உரிமை.
இதையும் படியுங்க: ஹோட்டலை சூறையாடி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு : கோவையில் பகீர் சம்பவம்!
அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களுக்கு சிரமம்,வீண் செலவுகள் அதிகமாகிறது.ஒரு மாதங்களாக அரசு அலுவலகங்களில் எந்த வேலையும் நடக்கவில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மக்களுக்கு சௌகரியம் நாட்டிற்கு பணம் மிச்சம்.இதை வலியுறுத்துகிறேன்.ஈரோடு கிழக்கு தொகுதியில் மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது.இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை.
தவிர்க்க முடியாத காரணத்தால் வரும் தேர்தல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. மாநிலம் மற்றும் மத்திய தேர்தலில் ஒரே சமயத்தில் நடப்பது நல்லது.அசம்பாவித சூழலில் இடைத்தேர்தல் நடைபெற்றது தான் ஆக வேண்டும்.
வாக்காளர்கள் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும்.அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் அனைவரின் வேலைகளும் தடைபடுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மக்களிடையே வரவேற்பு இல்லை.உணர்வுடன் வாக்களிக்கவில்லை.மீண்டும் மீண்டும் வாக்களிக்களிப்பதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.