அனுமதியின்றி கொடிக்கம்பம் நடுவதற்கு முயற்சி… பாஜகவினர் திடீர் கைது… கோவையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
1 November 2023, 1:15 pm

கோவையில் கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் அனுமதியின்றி கூடியதாக பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன் பகுதியில் பாஜக சார்பில் கொடிக்கம்பம் ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கூடிய பாஜகவினர், கொடியேற்றுவதாக கூறி புதிய கொடிக்கம்பத்தை நட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், புதிய கொடிக்கம்பம் அமைக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அனுமதியின்றி கூட்டம் கூடியதாக கூறி, மாவட்ட தலைவர் பாலாஜி, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, உட்பட பாஜகவினர் 57 பேரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி