கோவையில் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க வினரை கல் வீசி தாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனையடுத்து, பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள் 32வது வட்டம் எருக்கம்பெனி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பா.ஜ.க-வினர் வாக்கு சேகரிக்க வாலிபர் ஒருவர் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார். பா.ஜ.கவினரிடம் வாக்குவாதம் செய்த அவர், கற்களை வீசி எறிந்து தாக்கினார். இதில் பிரசாரத்திற்கு சென்ற 2 ஆண்களும், 3 பெண்களும் காயம் அடைந்தனர். அதில் பிரபு என்ற தொண்டர் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இது சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் சங்கனூர் ரோடு சண்முகா நகர் பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.