திருமுருகன் காந்தி பிரச்சாரம்… மிரட்டல் விடுத்து தடுத்து நிறுத்திய பாஜகவினர் ; கோவையில் பரபரப்பு…

Author: Babu Lakshmanan
10 April 2024, 1:02 pm

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

கோவை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்றிரவு ஒண்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமி தலைமையில் வந்த கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருமுருகன் காந்தியை மிரட்டினர். இதனால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

மேலும் படிக்க: உஷாரான பாஜக…. அண்ணாமலை சொல்லி கொடுத்தும் தவறு செய்யும் பிரதமர் மோடி ; கனிமொழி விமர்சனம்..!!

இது தரப்பினை சேர்ந்தவர்களும் பரஸ்பர வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை சமரசப்படுத்தினர். மே 17 இயக்கத்தினரின் பிரச்சாரத்தை பாஜக தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனிடையே காவல்துறையினர் மே 17 இயக்கத்தினர் அணிந்திருந்த டீசர்ட்டுகளை கழட்டுமாறு கூறியதால், காவல் துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 284

    1

    0