கல்லூரி முன்பு நீட் விலக்கு கையெழுத்து முகாம்… திருப்பூரில் பாஜகவினர் எதிர்ப்பு… திமுகவினருடன் வாக்குவாதம்…!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 11:28 am

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நீட் விலக்கு கையெழுத்து முகாம் நடத்திய தி.மு.க வினரை முற்றுகையிட்டு பா.ஜ.க வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அவிநாசி ஒன்றிய தி.மு.க சார்பாக நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடர்பாக கையெழுத்து பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, டேபிள் வைத்து நீட் எதிர்ப்புக்கு விருப்பமுள்ள மாணவ, மாணவிவிகளிடம் கையெழுத்து பெற்று கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் தி.மு.க வினர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கையெழுத்து பெற்றுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, கல்லூரி முன்பு இந்த முகாம் நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.கவினர் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.கவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த அவிநாசி காவல் துறையினர், இரு தரப்பினர் இடையே சமாதானம் செய்து வைத்து பா.ஜ.க. வினரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, உரிய அனுமதி பெற்று பிறகு கல்லூரி முன்பு முகாம் நடத்துமாறு தி.மு.க வினருக்கும் அறிவுத்தி அனுப்பி வைத்தனர்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!