‘உலகம் போற்றும் தலைவன்’ அண்ணாமலை… கோவையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல்…!!

Author: Babu Lakshmanan
15 October 2022, 10:02 am

கோவை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து அக்கட்சியினர் கோவையில் ஒட்டிய போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.

கோவையில் அரசியல் அமைப்புகள் சார்ந்த போஸ்டர்களும் வசனங்களும் இணைய தளத்தில் வைரல் ஆகி வருவது வாடிக்கையான ஒன்று. ஆளுங்கட்சியினர் சார்ந்த போஸ்டர்களும் , அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எதிர்கட்சியினர் ஒட்டப்படும் போஸ்டர்கள் அரசியல் ரீதியில் பெரும் வரவேற்பை பெறுகின்றது.

அதுபோலவே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போஸ்டர்கள் மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக சுவரொட்டிகளில் ஒட்டப்படுகிறது.

அதிலும், குறிப்பாக வெளிநாடு சென்று வந்த மாநில தலைவர் பெருமைப்படுத்தும் விதமாக உலகம் போற்றும் தலைவன் என்ற வசனம் மற்றும் அண்ணாமலையின் புகைப்படத்தொடு கோவை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!