ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் மாபெரும் ஊழல் புகார்… தடுப்புகளை உடைத்து வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது..!!

Author: Babu Lakshmanan
13 செப்டம்பர் 2022, 2:18 மணி
Quick Share

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி 500 க்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் மாநகராட்சி அலுவலகத்தில் நுழைந்து மேயர் அறையை இன்று முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு சுமார் 1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அனைத்து வார்டுகளும் முறையான கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாளா சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த பணிகள் மிக மிக மோசமாக நடந்து வருவதாக கூறி, வேலூர் மாநகராட்சியை கண்டித்து இன்று பா.ஜ.க வினர் வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பேரிக்கார்டுகளை உடைத்து எறிந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே நுழைந்து மேயர் சுஜாதா அறையை முற்றுகையிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேயர் அறையை முற்றுகையிட்ட நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை வந்து விடாக் கூடாது என்பதற்காக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் மாநகராட்சி அலுவலகத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய் உத்தரவிட்ட நிலையில் பா.ஜ.க வினர் கைது செய்யப்பட்டனர்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 760

    0

    0