கோவையில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பு : கவனத்தை ஈர்த்த பா.ஜ.க வேட்பாளர்.!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 1:47 pm

கோவை : கோவையில் பா.ஜ.க வேட்பாளர் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கியதை அடுத்து வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்., 19 ல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த வேட்புமனு பரிசீலனை ஓய்ந்தது. இதனையடுத்து வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் பணியை வேட்பாளர்கள் தொடங்கியுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாநகர பகுதியில் 100வார்டுகளும், 7 நகராட்சியும் ,33 பேரூராட்சிகள் உள்ளது.

இதனையொட்டி பிரதான கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு பரிசீலனை முடிவுற்று இருக்கிறது. இதன் காரணமாக போட்டியிடும் வேட்பாளர்கள் தற்பொழுது கோவை முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 46 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார் சுதாகர். இவர் தற்பொழுது வாக்காளர்களை கவரும் வகையில் நூதன முறையில் பொது மக்களிடம் காய்கறி தள்ளுவண்டியை தள்ளி கொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறார். இதனால் தற்பொழுது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சார களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!