ராதிகா சரத்குமார் நடிகை என்பதைத் தாண்டி ஒரு தைரியமான பெண்ணாக மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளு மன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழக முழுவதும் மார்ச் 20ம் தேதி துவங்கியது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4வது நாளாக இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
இந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் தன்னுடைய வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக ராதிகா சரத்குமார் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
மேலும் ராதிகா சரத்குமார் வேட்பு மனு தாக்கலின் போது அவருடைய கணவர் சரத்குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட பாஜகவின் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறியதாவது :- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்த பாரதிய ஜனதா கட்சிக்கும், பாஜகவின் தோழமை கட்சிகளுக்கும் மிகப்பெரிய வெற்றியாக வரவேண்டும் என நினைக்கிறேன். மேலும், வரும் நாட்களில் மக்களை சந்தித்து மக்களுக்கு சேவை செய்ய இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. தற்போது நடைபெறுவது நாடாளுமன்றத் தேர்தல் என மக்கள் புரிந்து கொண்டிருப்பதே அதுவே ஒரு வெற்றி. நடிகை என்பதைத் தாண்டி ஒரு தைரியமான பெண்ணாக மக்கள் என்னை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் எனக்கு ஒரு மகன் போலத்தான். விருதுநகர் பாராளுமன்றத்தில் பாஜக தலைவர்கள் யாரெல்லாம் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள் என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும், என ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கலின் போது எதிரெதிரே வந்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் கதாநாயகன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்,தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
கொலை மிரட்டல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாக கொலையுண்ட…
திருமணமான பிரபலங்கள் விவாகரத்து செய்து வருவது சினிமாத்துறையில் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது அதிகரித்து வருவதுதான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
வெற்றிகரமாக 25 வது நாள் பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன்,கயாடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘டிராகன்’ திரைப்படம்,அஸ்வத் மாரிமுத்து…
அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று பதில் சொல்வேன் என அதிமுக உடன் கூட்டணி…
This website uses cookies.