அன்னூர் அருகே கெம்ப நாயக்கன் பாளையம் அரசு பள்ளியில் நடந்த வாக்குப்பதிவில் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காரேகவுன்டம்பாளையம் ஊராட்சி கெம்ப் நாயக்கன் பாளையம் அரசு பள்ளியில் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி காலை முதல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வாக்கு பதிவு மையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் தனது வாக்கினை பதிவு செய்ய தன்னுடைய பேரனுடன் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றுள்ளார்.
மேலும் படிக்க: வாக்களிக்க வந்த இரண்டு பேர் மயங்கி விழுந்து பலி… வாக்குச்சாவடியில் பரபரப்பு ; விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!!
அப்போது, அங்கு சென்றபோது தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகளிடம் மூன்றாவது பட்டனை அழுத்தி பா.ஜ.கவுக்கு வாக்களிக்க சொல்லியுள்ளார். ஆனால், அங்கு பணியில் இருந்த அதிகாரி, திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், திமுக வேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்டன் அழுத்தியதாக புகார் எழுந்தது.
இது சம்பந்தமாக பா.ஜ.கவை சேர்ந்த நிர்வாகிகள் வாக்கு சாவடிக்கு சென்று அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உடனடியாக அங்கு பாஜக வேட்பாளர் எல்.முருகனும் வந்தார்.
சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு பணியில் இருந்த பெண் அதிகாரியிடம் தேர்தல் அதிகாரிகள் முறையாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்த வேண்டும். ஒருதலை பட்சமாக செயல்பட்டால், அது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம், என எச்சரித்தார்.
இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சரும், வேட்பாளருமான எல்.முருகன் தேர்தலில் ஈடுபடும் அதிகாரிகள் எப்போதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அதனை மீண்டும் ஒருமுறை இந்த வாக்குச்சாவடியில் அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட அந்த தேர்தல் அதிகாரி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எல். முருகன் தெரிவித்தார்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.