பிரச்சாரத்தின் போது வேட்பாளருக்கு பிரசவ வலி: பெண் குழந்தை பெற்ற பாஜக வேட்பாளர்…வாழ்த்து தெரிவித்த வார்டு மக்கள்..!!

Author: Rajesh
18 February 2022, 3:16 pm

தென்காசி: கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிடும் கர்ப்பிணியான பா.ஜ.க வேட்பாளர் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்தவர் ரேவதி. இவர் கடையநல்லூர் நகராட்சி 1வது வார்டு பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கணவர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதை அறிந்த அப்பகுதி வாக்காளர்கள் வேட்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!