கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பாஜக துணை நிற்கும் : உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்தித்த வானதி சீனிவாசன் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2022, 4:17 pm

திருவள்ளூர் : கல்லூரி மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல் துறை அலட்சியம் காட்டியதாகவும் நீதி விசாரணையில் திருப்தி இல்லை என்றும் எனவே உரிய நீதி கிடைக்க முதல்வரிடம் தேசியமகளிர் ஆணையம் மூலம் நாடப்படும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

திருவள்ளூர் அருகே கோவில் பூசாரியின் அறையில் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம்தேதிசெவ்வாய்க்கிழமையன்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி மாணவி ஹேமா மாலினி உயிரிழந்தார்.

இந்த நிலையில் தாமரைப்பாக்கம் அருகே உள்ள செம்பேடு கிராமத்தில் கல்லூரி மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆறுதல் கூறினார்

அப்போது அவரது காலில் விழுந்து இறந்துபோன மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க நியாயம் வேண்டும் என பாஜக வானதி சீனிவாசனிடம் வேண்டுகோள் வைத்தனர் .அவர்களிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்த அவர் உரிய நீதி கிடைக்க பாஜக உதவி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.

காலில் விழுந்து வானதி சீனிவாசன் அவர்களிடம் இறந்து போன மாணவி பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்து அங்கு விவசாய பண்ணையில் தங்கி பணிசெய்ய பல்வேறு இடங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் அங்கு உள்ளதாகவும் அவர்களை மீட்க வேண்டும் எனவும், கல்லூரி மாணவி உயிரிழந்த பிரச்சினையை விட்டுவிடுங்கள் என அவரது குடும்பத்தினரிடம் முனுசாமி கூறியதாகவும் அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாகவும் காவல் துறை அலட்சியம் காட்டியதாகவும்அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதி விசாரணையில் திருப்தி இலை என்றும் உரிய நீதி கிடைக்க முதல்வரிடம் தேசியமகளிர் ஆணையம் மூலம் நாடப்படும் என கூறிய அவர், லாவண்யா வழக்கு போன்று இந்த பெண்ணின் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்க பாஜக துணை நிற்க்கும் என அவர் தெரிவித்தார்

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…