பிரதமர் மோடியின் பிறந்த நாள் பேனர் கிழிப்பு ; திமுக – பாஜகவினர் இடையே மோதல்.. திருச்சியில் பரபரப்பு…

Author: Babu Lakshmanan
17 September 2022, 1:50 pm

திருச்சியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதால் பாஜக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பிரதமர் மோடியை வாழ்த்தி பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேனரை சில மர்ம நபர்கள் கிழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பகுதிச் செயலாளர் பரமசிவம் மற்றும் பாஜகவினர் குவிந்து திமுகவினர் தான் கிழித்தினர் எனக்கூறி கோஷமிட்டனர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாள் பேனர் கிழிப்பு ; திமுக - பாஜகவினர் இடையே மோதல்.. திருச்சியில் பரபரப்பு...

இதை கண்ட திமுகவினர் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அங்கு திமுகவினரும் திடீரென மாநகராட்சியில் எந்தவித அனுமதியும் பெறாமல் திடீரென ஒரு கொடிக் கம்பத்தை ஊன்றினர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது, திமுகவினர் இந்த இடத்தில் எந்த அனுமதியும் வாங்கவில்லை என கூறி பேனரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். பாஜகவினரும் எந்த அனுமதி இல்லாமல் திடீரென இங்கு திமுகவினர் கொடிக்கம்பத்தை வைத்துள்ளார்கள் என கூறினர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாள் பேனர் கிழிப்பு ; திமுக - பாஜகவினர் இடையே மோதல்.. திருச்சியில் பரபரப்பு...

இந்நிலையில், திமுக மற்றும் பாஜக கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த அந்து பேனரை அப்புறப்படுத்தினர். திமுகவினரால் வைக்கப்பட்ட கொடி கம்பத்தையும் அப்புறப்படுத்தினர்.

பாஜக, திமுகவினரின் மோதல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, திருச்சி மாவட்ட பாஜக சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த முதல் குழந்தைக்கு திருச்சி மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாலன்ஜி தங்க மோதிரம் அணிவித்து பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

  • Viduthalai 2 box office collection தினம் தினமும் இனி வேட்டை தான் …விடுதலை 2 முதல் நாள் வசூலை பாருங்க..!
  • Views: - 609

    0

    0