நன்றி மழையில் பாஜக – திமுக… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் அனுப்பிய நன்றி மடல்!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2024, 11:41 am
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.
அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் எழுதி அதில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கும், ஆதரவிற்கும் நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றி அடைய நீங்கள் அனுப்பிய வாழ்த்து கடிதத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என கூறப்பட்டுள்ளது,.