பாஜகவினர் தமிழகத்தில் அரசியல் ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை எப்படி கையாள வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி வீரமணி தலைமையில் திராவிடர் கழக தலைமை கூட்டத்தில் 15 தீர்மானங்கள் உள்பட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி
திராவிடர் கழக தலைமை கழக கூட்டத்தில் தந்தை பெரியார் 144 வது ஆண்டு பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பட ஊர்வலம் ஒலிபெருக்கி வழியில் பெரியார் வரை இசை பாடல்கள் என்கிற வகையில் பெரும் கொள்கை பிரச்சார விழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பெரம்பலூர் மாவட்டம் சிறுகனூரில் பெரியார் உலகம் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள நிலையில் அங்கு சுமார் 150 அடி உயர பெரியார் சிலையை அமைப்பதற்கான பணியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட மதவாதிகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிராக செயல்படக்கூடிய சிறந்த தலைவராக காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி இருப்பதாக பாராட்டினார்.
திராவிடர் கழக சித்தாந்தம், பாஜக சித்தாந்தம், நேர் எதிர் சித்தாந்தம் எனவும், திராவிடர் கழகத்திற்கு எதிராக செயல்படக்கூடிய துணிவு பாஜகவிற்கு இல்லை எனவும் அவர்கள் அரசியல் ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை தாக்கி அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் மீது செருப்பு வீச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர் அரசியலுக்காக செருப்பு வீச்சில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
பாஜக தலைவரான அண்ணாமலை அடித்தால் திருப்பி அடிப்பேன் என ஊடகவியலிடம் அளித்த பேட்டியின் மூலம் அவரது தரத்தை காட்டியுள்ளதாகவும் அவர் தலைவர் பகுதிக்கு தகுதியானவரா என கேள்வி எழுப்பிய அவர், சட்டத்தை கையில் எடுத்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும் என தெரிவித்தார்.
ஆதிதிராவிடர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் காணக்கூடிய வகையில் இருக்கக்கூடிய சலுகைகளை பறிப்பதற்கான சூழ்ச்சிகள் அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை பாதுகாக்க சட்டரீதியாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.