திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆரத்தொழுவை சேர்ந்தவர் பூபதி ( 45). இவர் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள அய்யாசாமி காலணி பகுதியில் கோழி இறைச்சிக்கடை மற்றும் உணவகம் நடத்தி வருகிறார்.
பூபதிக்கு சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற விபத்தில் ஒரு கண் பார்வை பறிபோனது.இவர் மற்றும் இவரது குடும்பத்தினரின் உதவியோடு ஹோட்டல் மற்றும் கறிக்கடையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கேயம், அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நகர செயலாளராக உள்ள செல்வகுமார் (42) என்பவர் பூபதியின் கடைக்கு நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளார்.
பின்னர் கடைக்குள் நபர் ஒருவர் நுழையும் சத்தம் கேட்டு பூபதி வெளியே வந்துள்ளார். அப்போது பூபதி செல்வகுமாரிடம் நீங்கள் யார் இந்த நேரத்திற்கு வந்து உள்ளீர்கள் என கேட்டதாக கூறப்படுகிறது
இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகி செல்வகுமார் சாலை அமைக்க போடப்பட்டிருந்த கருங்கல்லை எடுத்து பூபதியின் முகத்தில் வீசி உள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பூபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கையில், பூபதி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் முன்பகை ஏதும் இல்லை எனவும் பூபதி ஹோட்டல் கடையில் நாய் ஒன்றை வளர்த்து வந்ததாகவும் அதே போல் பாஜக நிர்வாகி செல்வகுமாரும் அயல்நாட்டு ரக நாய் ஒன்றை வளர்த்தி வந்துள்ளார்.
அந்த நாயை செல்வக்குமார் அவரது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து கொண்டு அவ்வப்போது சாலையில் சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் கூட்டி செல்லும் நாயை, பூபதி வளர்க்கும் நாய் குறைத்து கடிக்க வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் பலமுறை பூபதியின் நாயை அடிக்கவும், கொல்லவும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் செல்வகுமார் சாலையில் செல்கையில் பூபதியின் நாய் இவரைக் கண்டு குறைத்ததாகவும்,
இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், கீழே கிடந்த கல் மற்றும் கட்டையை எடுத்துக்கொண்டு நாயை துரத்தி கொண்டு ஓடியதில் அவர் கடைக்கு உள்ளே புகுந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் அடிதடி வரை சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் தன்னை தாக்கிய பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பூபதி காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பெயரில் காங்கேயம் போலீசார் பொது இடங்களில் ஆபாசமாக பேசுதல் கொலை முயற்சி கொலை வெறியுடன் தாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் பாஜக நிர்வாகி செல்வகுமார் பூபதியை அடித்து விட்டு, அவர் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவருக்கு முன்னால் தன்னையும் தாக்கி விட்டதாக காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்ந்துள்ளார்.
இதன் பேரில் ஹோட்டல் கடை உரிமையாளர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்த பொய் புகார் கொடுத்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து, என் மீதான வழக்கை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு கண் பார்வை இழந்த ஹோட்டல் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கேயத்தில் 2 நாய்களுக்கு இடையேயான சண்டையால், ஏற்பட்ட தகராறில் பாஜக நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் காங்கேயத்தில் பேசுபொருளாக உள்ளது
டிராகன் படத்தின் OTT வெளியீடு தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும்,இயக்குநராகவும் தற்போது கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான…
குணா திரைப்படம் குறித்து சிபி மலையில் விளக்கம் பிரபல மலையில் இயக்குநர் சிபி மலயாழ்,குணா படத்தை முதலில் தான் இயக்கவிருந்ததாக…
கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'OG சம்பவம்' பாடலை தற்போது…
கோவை பகுதியில் அமைந்து உள்ள பிரபல மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளி வளாகத்தில்…
ஈரோட்டில், மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தாய் உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை…
பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் கதாநாயகன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்,தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
This website uses cookies.