முதலாளி ஆசைக்கு நீ இணங்கிப் போ.. பாஜக பிரமுகரின் பசிக்கு துணை போன தொழிலாளியின் குடும்பம் : இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2023, 2:29 pm

முதலாளி ஆசைக்கு நீ இணங்கிப் போ.. பாஜக பிரமுகரின் பசிக்கு துணை போன தொழிலாளியின் குடும்பம் : இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் கரியமங்கலம். இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்வி. இவரது கணவர் சீனுவாசன் இவருக் 55 வயதாகிறது.

இவர் பாஜவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளராக பணியாற்றி கொண்டிருந்தர். தற்போது, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வேறு பொறுப்பு வழங்க இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சீனுவாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ராமஜெயம் என்பவர், வேலை பார்த்து வருகிறார்.. இவர் அந்த நிலத்திலேயே மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

22 வயதாகும் அவரது மனைவியுடன், ராமஜெயத்தின் அப்பா பெருமாள், அம்மா பச்சையம்மாளும் ஒன்றாகவே வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சீனுவாசன், ராமஜெயத்தின் மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்து வந்ததாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து கணவன் ராமஜெயத்திடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ராமஜெயம் சொன்ன வார்த்தைதான் மனைவியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் சொன்னது. “அவர்தான் நமக்கு முதலாளி.. நிலத்தின் ஓனர் சொல்வதை போலவே, கேட்டு நடந்துக்கோ” என்று கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் வற்புறுத்தியிருக்கிறார்கள்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த 22 வயது இளம் மனைவி, அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு மன உளைச்சளில் இருந்துள்ளார். இந்த நிலையில் விவசாய நிலத்திலேயே, சீனுவாசன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த கொடூர சம்பவத்திற்கு பெண்ணின் கணவன் மற்றும் பெற்றோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் கொந்தளித்த பெண், செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தார்.

இதில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஜக பிரமுகர் சீனுவாசன், அவருக்கு உடந்தையாக இருந்த ராமஜெயம், பெருமாள், மற்றும் பச்சையம்மாள் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 525

    0

    0