பாஜக பிரமுகர் திடீர் கைது.. திண்டுக்கல்லில் தீராத தலைவலி : பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2025, 4:46 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது நெய்க்காரப்பட்டி பேரூராட்சி. இங்கு உள்ள பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருபவர் ராஜீவ் காந்தி. (33) இவர் பாஜக இளைஞர் அணி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்தபடியே கூர்மையான கத்தியை வைத்து பின்னணி பாடல் இசையுடன் வீடியோ எடுத்து தனது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்க: UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

BJP Executive Arrest

தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக இளைஞரணியின் ஒன்றிய செயலாளரான ராஜிவ்காந்தி, பழனியில் கடந்த வாரம் பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது பணியாளாக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார்.

BJP Executive Arrest in Palani

இவர் மீது குடிபோதையில் பேருந்தை மரித்ததாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Rajinikanth Jailer 2 announcement ரஜினியின் தரமான சம்பவம் LOADING …தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ…!
  • Leave a Reply