பைக் வாங்கி தருவதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாஜக பிரமுகரும், தொழிலதிபருமான எம்எஸ் ஷா கைது!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2025, 4:03 pm

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்துவருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் பாஜக பிரமுகரான எம்.எஸ்.ஷா மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படியுங்க: பீப் விவகாரம்… பாஜக அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி வீச்சு… கோவையில் பதற்றம்!!

அதில் தனது மகளின் செல்போனில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் M.S ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் இருந்து வந்ததாகவும், இதையடுத்து தனது மகளை கேட்டபோது தனது மனைவி பாஜக பிரமுகர் இருக்கும் இடத்திற்கு அழைத்துசென்று தனியாக இருந்துவந்துள்ளது தெரியவந்ததாகவும், மேலும் வாட்ஸ் அப் மூலமாக நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தையை கூறி அழைத்துசென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

Bjp Executive Arrest in Pocso Case

இதற்கு முழுமையாக தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி M.S ஷா மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Prabhas marriage updates கல்யாணத்துக்கு OK சொன்ன நடிகர் பிரபாஸ் ….ரகசியத்தை போட்டுடைத்த ராம் சரண்…பொண்ணு எந்த ஊரு தெரியுமா..!
  • Leave a Reply