3 மணி நேரம் விசாரணை… நள்ளிரவில் கனல் கண்ணன் மீண்டும் கைது… திமுக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை!!

Author: Babu Lakshmanan
11 July 2023, 2:36 pm

கிறிஸ்தவ மத போதகரை அவமதிக்கும் விதத்தில் பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திட்டுவிளையை சேர்ந்தவர் ஆஸ்டின் பெனட். இவர் திமுகவின் ஐ.டி விங் அமைப்பில் பொறுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார் அந்த புகாரில் ” சமூக வளைதளம் ஒன்றில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் நிலை இதுதான் எனக் குறிப்பிட்டு கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பெண்ணுடன் ஆடுவது போன்ற காட்சியை எடிட் செய்து பின்னணியில் தமிழ் இசையுடன் பதிவிட்டுள்ளார்.

இது ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும் அவமதிக்கும் செயல் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரை அடுத்து நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் சினிமா,ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 (ஏ), 562 (ii) ஆகிய பிரிவு இடங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் கோவில் சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணனுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைத்தனர்.

அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் கனல் கண்ணன் நாகர்கோவிலில் உள்ள குமரிமாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்தார். அவரிடம் மூன்று மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடந்தது, அதனைத் தொடர்ந்து மதிய உணவு இடைவேளையில் கனல் கண்ணனை போலீசார் வெளியே செல்ல அனுமதித்தினர்.

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக இந்து அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். திடீரென போலீசார் மீண்டும் அவரை விசாரணைக்கு வர வேண்டுமென பலவந்தமாக வற்புறுத்தினர். இதற்கு இந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ‘இது சாதாரணமான விசாரணை தான் உணவு நாங்கள் வாங்கி கொடுக்கிறோம். நீங்கள் தகராறு செய்ய வேண்டாம்,’ என போலீசார் தெரிவித்தனர் .அதனைத் தொடர்ந்து விசாரணை அழைத்துச் சென்றனர். மேலும் போலீஸாரின் கஸ்டடியில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

295 (மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது) 505/2 ( பிரிவினையை ஏற்படுத்துவது) ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 441

    0

    0