சிவகாசியில் பாஜக மாவட்ட செயலாளர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 42). விருதுநகர் பாஜகவின் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளார்.
இவர் திருத்தங்கல்லில் ஜவுளிக்கடை நடத்தும் ஈஸ்வரனிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி 51 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், திருத்தங்கல் போலீஸாரால் சத்யராஜ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் ஜாமீனில் வெளி வந்த சத்யராஜ் இன்று திருத்தங்கல் காவல் நிலையம் முன்பாக உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் தீப்பற்றிய உடன் மேலாடையை கழற்றியதால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தீக்குளித்த அவரை மீட்ட போலீசார் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 30 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் மீது பொய் வழக்கு தொடுத்து தன்னை கைது செய்துள்ளதாகவும், தமிழக அரசு தமக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் எனவும் தீக்குளித்த சத்யராஜ் பேட்டி அளித்துள்ளார்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.