Beef கடை போடக்கூடாது என தம்பதியை மிரட்டிய பாஜக பிரமுகர்…வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2025, 10:42 am

கோவை உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் கடை நடத்தும் தம்பதியிடம், வேறு எந்த மாமிசம் கடை வேண்டுமாணலும் போடு. பீப் கடை போடாதே என அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் மிரட்டும் வீடீயோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Beef Biriyani Issue Bjp Executive Threats Couple

பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மிரட்டல் விடுப்பதால் அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பா.ஜ.க பிரமுகர் சுப்பிரமணி இதை நானாக தெரிவிக்கவில்லை பீப் கடை போடக் கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு என தெரிவித்து உள்ளார். மேலும் எங்கள் ஊர் அருகில் அவர்கள் தெரு உள்ளது அங்கே கடை போடுவது எங்களுக்கு பிரச்சனை இல்லை எனவும் தெரிவிக்கிறார்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 72

    0

    0

    Leave a Reply