செல்பி எடுக்க முயன்ற பாஜக நிர்வாகி… கீழே விழுந்து காயம் : ஆறுதல் கூறி அட்வைஸ் செய்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2024, 1:26 pm

செல்பி எடுக்க முயன்ற பாஜக நிர்வாகி… கீழே விழுந்து காயம் : ஆறுதல் கூறி அட்வைஸ் செய்த அண்ணாமலை!!

கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு ஆர் எஸ் புரம் பகுதியில் நேற்று மாலை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடித்து அண்ணாமலை காரில் கிளம்பினார். அப்பொழுது அவருடன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் செல்பி, புகைப்படம் எடுத்துக் கொள்ள முண்டியடித்தனர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காரில் ஏறிய நிலையில்,புபைபடம் எடுக்க வந்து கூட்டத்தில் சிக்கிய கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க நிர்வாகி ஹரிகரன் என்பவர் கீழே விழுந்ததில் மூக்கு உடைந்தது.

காரில் இருந்தபடி அதை பார்த்த அண்ணாமலை , காரில் இருந்து இறங்கி அந்த நிர்வாகியை அழைத்து காரில் இருந்த டிஷ்யூ பேப்பர் மூலம் மூக்கு உடைந்த நிர்வாகியின் முகத்தை துடைத்து விட்டார்.

அவருக்கு ஆறுதல் கூறிய அண்ணாமலை பிளாஸ்டர் வாங்கி மூக்கில் ஓட்டும்படி அறிவுறுத்தி விட்டு சென்றார். இதனையடுத்து பாஜகவினர் அவரை அழைத்துச் சென்று, மருந்தகத்தில் பிளாஸ்திரி ஒன்றை வாங்கி மூக்கில் ஒட்டி விட்டனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!