இராமபிரானின் திருத்தளங்கள் அனைத்திலும் பாஜக தோல்வி : பத்ரிநாத்தை சுட்டிக்காட்டிய சு.வெங்கடேசன் எம்பி!!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2024, 12:46 pm
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. அதேபோல 20 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
2012 மற்றும் 2022ல் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர சிங் பந்தாரி, திடீரென கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி நடந்த தேர்தலில் 49.80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
2022ல் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர சிங் பந்தாரி, திடீரென கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி நடந்த தேர்தலில் 49.80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட புடோலா 27,696 வாக்குகள் பெற்று, காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான ராஜேந்திர சிங் பண்டாரியை 5,095 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அயோதியில் ராமர் கோவில் கட்டிய பிறகு, பாஜதான் அங்கு ஜெயிக்கும் என கருத்து நிலவி வந்த நிலையில், அங்கு பாஜக தோல்வியடைந்தது.
இதை தற்போது மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், அயோத்தி, பிரயாக் ராஜ், இராமநாதபுரம், நாசிக், ராம்டெக், சித்ர கூட் அதனைத் தொடர்ந்து நேற்று தேவபூமி பத்ரிநாத்திலும் தோல்வியடைந்துள்ளது பாஜக.
ஶ்ரீ இராமபிரானின் திருத்தளங்கள் அனைத்திலும் பாஜக தோல்வி. தீமைகள் வீழ்த்தப்படுவதே இராமகதையின் நியதி என பதிவிட்டுள்ளார்.