ஆண்டவனே என் பக்கம் : சூப்பர் ஸ்டார் வசனம் பேசி கிரண் பேடி ஸ்டைலில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக பெண் வேட்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 4:29 pm

வேலூர் : ரஜினியின் ஸ்டைலில் ஆண்டவனே என் பக்கம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதி என வேட்புமனுத் தாக்கல் செய்த பாஜக பெண் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆகிய நகராட்சிகள், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம், பேரூராட்சி என மொத்தம் 180 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை அடுத்து அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை பட்டியலை வெளியிட்டு வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியதை அடுத்து வேலூர் மாநகராட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

இதனையடுத்து வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 5 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் விஜயாபானு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தங்களுக்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மக்களுக்கு நான் 2017 முதல் கட்சியின் சார்பாகவும் எனது அறக்கட்டளையின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன்.

மேலும் கொரோனா காலகட்டத்தில் அரசாங்கத்தின் அனுமதியுடன் அடித்தட்டு மக்களுக்கும் நான் பல்வேறு நலத்திட்டங்களை செய்து களப்பணி ஆற்றி உள்ளேன் பாரதிய ஜனதா கட்சி தற்போது மீண்டும் ஒரு கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளது.

வேலூர் மாநகராட்சி 5-வது வார்டில் என்னை களப்பணியாளராக நிறுத்தியுள்ளது இன்னும் கூடுதலாக பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை செய்யக்கூடிய வாய்ப்பை கட்சி எங்களுக்கு அளித்துள்ளது.

எங்களைத் நாடி வருவோருக்கு நாங்கள் எப்பொழுதும் உதவி செய்வோம் அதற்கு முடிவே கிடையாது ஆண்டவனே என் பக்கம் நான் வெற்றி பெறுவது உறுதி என ரஜினிகாந்த் ஸ்டைலில் பேட்டியளித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி