கைகளில் கஞ்சா பொட்டலம்… CM ஸ்டாலினுடன் நேருக்கு நேர்… பாஜக நிர்வாகி மீது பாய்ந்த 6 வழக்கு மதுரையில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan30 April 2024, 1:25 pm
மதுரை விமான நிலையத்தில் கஞ்சா பொட்டலங்கள் முதல்வரிடம் மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியை 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கொடைக்கானல் செல்வதற்காக குடும்பத்துடன் மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் முக ஸ்டாலினிடம், கஞ்சா பொட்டலங்களுடன் மனு கொடுக்க முயன்ற பாஜக ஓபிசி மாநிலச் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டியை விமான நிலையத்தில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும் படிக்க: கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு.. நீதிபதி கேட்ட ஒரே ஒரு கேள்வி : Court போட்ட அதிரடி உத்தரவு!!
அப்போது மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பிலிருந்து காவல் துறையினரை ஆபாசமாக திட்டியது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது என ஆறு பிரிவின் கீழ் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் மாதவன் என்ற காவலர் கொடுத்த புகாரின் பெயரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகியை காவல்துறையினர் விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.