பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் திடீர் கைது…. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்… சென்னையில் பரபரப்பு…

Author: Babu Lakshmanan
18 August 2023, 2:19 pm

சென்னையில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வத்தை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் என் தேசம் என் மக்கள் என்ற கொள்கையின்படி, இன்று காலை கோவிலில் பாஜகவினர் தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

பாஜக வில்லிவாக்கம் கிழக்கு தொகுதி தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டார்.

அப்பொழுது, ஒரு பிடி மண் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு போலீசார் சார்பில் வினோஜ் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பாஜகவினர் போலீசருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து மாநில செயலாளர் வினோஜ் செல்வம், பாஜக வில்லிவாக்கம் கிழக்கு தொகுதி தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?