மற்றவர்களை ஊழல்வாதிகள் என சொல்ல பாஜகவுக்கு தகுதியில்லை : காரணத்தை கூறிய அமைச்சர் பிடிஆர்!
மதுரை சிம்மக்கல் அண்ணாமலை திரையரங்கம் அருகே இருக்கக்கூடிய சைக்கிள் தெரு பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக தைக்கால் தெரு, சிம்மக்கல், காசி விஸ்வநாதர் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
பிரச்சாரத்தின் போது மரக்கால் ஆட்டம் கேரள செண்டை மேளம் டிரம்ஸ் இசைக்கலைஞர்கள் வாக்கியங்கள் வாசிக்க கைகளில் வேட்பாளரின் சின்னத்தை ஏந்தியவாறு திமுக கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். பணியில் ஆங்காங்கே பூரண கும்பம் மரியாதை கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் அமைச்சருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து சிம்மக்கல் பகுதியில் அவர் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் வண்ணம் வாகனத்தில் இருந்தவாறு பேசுகையில் ஒரு அரசியல்வாதிக்கு பொதுமக்கள் பணியில் உள்ளவருக்கு மனிதநேயம், பாசம், அன்பு இருக்க வேண்டும்.
பின்தங்கியவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி முன்னேற்ற வேண்டும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தேவையான செயல்திறனும் இருக்க வேண்டும்.
மகளிர் நலன், குழந்தைகள் நலன் எனும் எதிர்கால நலன்களுக்கு திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மனிதநேயமும் செயல்திறனும் தான் நல்ல அரசியல்வாதிக்கு அடையாளம்.
மத்திய அரசு 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது. எவ்வாறு பிரிவினையை உருவாக்கலாம், பணத்தை சுருட்டலாம், எப்படி அனைவரையும் அமுக்கி வைக்கலாம், மிரட்டலாம் என பாஜக அரசு செயல்பட்டு வருகிறார்கள்.
பாஜக அரசு தேர்தல் பத்திரம் என்ற கொடூரமான திட்டத்தை செயல்படுத்தி ஊழல் செய்து பணத்தை சுருட்டி உள்ளனர். ஊழல்வாதிகள் என மற்றவர்களை சொல்ல தகுதியில்லாத அரசாங்கம் பாஜக. ஒட்டுமொத்த ஊழலின் அடையாளமாக பாஜக அரசு உள்ளது.
ஒத்துழைப்பு தராத தேர்தல் ஆணையரை தானாக ராஜினாமா செய்ய வைத்து கழட்டிவிட்டனர். ஒத்துழைப்பு கொடுக்கும் நபர்களை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கின்றனர்.
தேர்தல் ஆணையம் ஒரு நாடாளுமன்ற தேர்தலை 3 மாதமாக நடத்துகிறார்கள். எதற்காக காலதாமதம் செய்து நடத்துகிறார்கள். ஒன்று தேர்தல் ஆணையத்திடம் செயல்திறன் இல்லை. இல்லை தேர்தலை தவறான காரணத்திற்காக இழுத்தடித்து நடத்துகிறார்கள்.
வரிப்பணத்தை சாமானிய மக்களிடம் இருந்து பறிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தினர். பாஜக அரசு இன்னொருமுறை ஆட்சிக்கு வந்தால் ஒருநாள் நீடித்தாலும் நமக்கு தெரிந்த இந்திய நாட்டை பிணமாக்கி எரித்துவிடுவார்கள்.
பணமும் அதிகாரமும் தான் முக்கியம் என பாஜக உள்ளது. சுயநலத்துக்காக மக்களுக்காக நடக்காத ஆட்சி பாஜக ஆட்சி. நாட்டையும், ஜனநாயகத்தையும், வாழ்க்கை முறையும் காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். அப்போது தான் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்.
எதிர்க்கட்சித்தலைவர்கள் ஊழல் செய்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள் என கூறியதோடு, வழக்குப்பதிவு செய்வோம், கைது செய்வோம் என சொன்னார்கள். தொடர்ந்து பாஜக 25 எதிர்க்கட்சி தலைவர்கள் 25 மீது வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் வழக்கு தொடர்ந்த 25 பேரும் பாஜகவில் இணைந்துவிட்டதால் அவர்களை உத்தமர்கள் என பாஜக சொல்கிறது. அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பாஜகவில் இணைந்ததால் காணாமல் போய்விட்டது.
25 பேரும் உத்தமர்களே என மாநிலங்களவை, மக்களவை, மத்திய அமைச்சர் என பதவிகளை பாஜக வாரி கொடுத்துள்ளது. ஊழலுக்கும் பாஜகவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என பேசினார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.