இந்துக்களை ஒழிப்போம் என்று சொல்வது திமுகவின் அழிவிற்கு ஆரம்பம் : கருப்பு முருகானந்தம் எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 12:47 pm

இந்துக்களை ஒழிப்போம் என்று சொல்வது திமுக கட்சியின் அழிவிற்கு ஆரம்பம் என முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகாணந்தம் பேட்டி .

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் 31ம் ஆண்டு வெற்றி விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முத்துப்பேட்டை ஜாம்பவான்னோடை பகுதியில் உள்ள சிவன் கோவிலில் 19க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது.

பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் இருக்கும் வகையில், திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 3000 த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக திருச்சி சரக காவல்துறை தலைவர் கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயச்சந்திரன், விழுப்புரம் டிஐஜி ஷியாவுல் ஹக், திருச்சி டிஐஜி பகலவன் தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆங்காங்கே கண்காணிப்பு கேமராவும், மொபைல் வாகனம் மூலம் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு, காவல்துறையினர் தீவிரமாக விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையினை கண்காணித்து, மேலும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜீராவாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தப்பட்டது.

இந்த விநாயகர் ஊர்வலம் ஜாம்பாவண் ஒடை பகுதியில் தொடங்கி முத்துப்பேட்டையில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தம்பிக்கோட்டை கீழபாலம் பாமணியாற்றாங்கரையில் கரைக்கப்பட்டது. அப்போது, பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் முருகானந்தம், இந்துக்களை ஒழிப்போம் என்று சொல்வது திமுக கட்சியின் அழிவிற்கு ஆரம்பம் என தெரிவித்தார்.

  • Abhinay Fighting for his life உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?
  • Close menu